யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க நிவாரணப் பொதிகள்! மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது.
குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.



