;
Athirady Tamil News

சீரற்ற வானிலையால் முட்டைவிலை அதிகரிப்பு

0

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.