;
Athirady Tamil News

தென் சீனா, ஹாங்காங்கை நெருங்கும் நௌல் புயல்

0

தென் சீனா மற்றும் ஹாங்காங்கை நெருங்கி வரும் ‘நௌல்’ புயல் காரணமாக, அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் இருந்து சீனாவைத் தாக்கும் 3-ஆவது புயல் இதுவாகும். தென் சீனக் கடலின் வடகிழக்குப் பகுதியில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வரும் இப்புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கிறது.

முன்னெச்சரிக்கையாக, குவாங்டாங்கில் 20,000 மக்கள் இடம்மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை வரை 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.