;
Athirady Tamil News

சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!

0

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நேற்று துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் எனத் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் பயின்று வருவதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிட்னியின் போனிரிக் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எஃபிஐயும் உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டிற்கு இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேவையான அனைத்து வகையிலும் உதவுவதாக நட்பு நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

யூத மதப் பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து, குழந்தைகள் விளையாட்டுத் திடலுக்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடற்கரையில் மக்கள் ஆங்காங்கே குழுமியிருந்த நிலையில், பூங்காவில் துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிட்னி நகர காவல் துறையும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரும் சுடப்பட்டனர். ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இதுவரை 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இஸ்ரேலைச் சேர்ந்தவரும் அடங்குவார். 29 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவ்நீத் அக்ரம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தங்கியிருந்த சிட்னியின் போனிரிக் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கடற்கரைக்கு மக்கள் யாரும் வர வேண்டாம் என காவல் துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.