தமிழர் பகுதியொன்றில் அதீத வேகத்தால் நேர்ந்த விபத்து
புத்தளம் – சிலாபம், பங்கதெனிய ஓட்டுத் தொழிற்சாலை சந்தியில் கார் ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த கார் சாலையை விட்டு விலகி பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கார் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.