சவப்பெட்டியால் வெடித்த சர்ச்சை ; தாயிற்காக 15 கோடி செலவழித்த மகன்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் டெல்டா மற்றும் பேயல்சா மாகாணத்திற்கான மத போதகராக இருப்பவர் ஜெரேமியா புபெயின்.
இவரின் தாயான மாமா அசெட்டு, கடந்த மே மாதம் தன் 104வது வயதில் மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு சமீபத்தில் நடந்தது.
தன் தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக, தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஜெரேமியா.
இதன் மதிப்பு, 15 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்கு, மிகவும் ஆடம்பரமாக நடந்தது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மதபோதகரின் இந்த செயல் அந்நாட்டில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.