இலங்கை வந்துள்ள தென்னிந்திய நடிகர் பிரபு தேவா
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
நடிகர் பிரபு தேவா சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நன்றி கூறிய ஶ்ரீ லங்கன் விமான சேவை
இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன் ஶ்ரீ லங்கன் விமான பணியாளர்கள் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் “புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், நடனக் கலைஞர் மற்றும் நடன அமைப்பாளரான பிரபுதேவாவை, சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மீண்டும் வரவேற்றது எங்களுக்கு ஒரு பெருமையாகும்.
எங்களுடன் பயணிக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி,” என ஶ்ரீ லங்கன் விமான சேவை கூறியுள்ளது.