ஜனாதிபதியின் நிகழ்வுக்கு ஓடிய இ.போ.ச பேருந்துகள் – பேருந்து இன்றி மக்கள் சிரமம்
;
யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான உள்ளுர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் பாரிய அசௌகரிங்களுக்கு உள்ளாகினர்.
யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களில் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.