;
Athirady Tamil News

ரூ.200 லட்சம் கோடியை தாண்டிய இந்தியாவின் கடன் – அதற்கு வட்டி மட்டும் இத்தனை கோடியா?

0

இந்தியாவின் கடன் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில், அதில் வட்டிக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் கடனுக்கான வட்டி
2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில், நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் கடன் மதிப்பு சுமார் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடனில் 95 சதவீதத்திற்கு அதிகமாக அரசுப் பத்திரங்களை விற்பனை செய்தல், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், LIC போன்ற காப்பீடு நிறுவனங்கள், PF போன்ற மக்களின் சேமிப்பு திட்டங்களில் இருந்து உள்நாட்டு கடனாகவே திரட்டப்பட்டுள்ளது.

2031 ஆம் ஆண்டுக்குள் நிதி பற்றாக்குறையை ஜிடிபியில் 4.3 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த கடனுக்கான வட்டி செலுத்த மட்டும் இந்த ஆண்டு ரூ.13.6 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது அரசின் மொத்த செலவில் 25% ஆகும். அரசுக்கு வரும் ரூ.1 வருவாயில், 25 பைசா வட்டிக்காக செலவு செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.