;
Athirady Tamil News

ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ஜாமினில் விடுதலை

0

மேற்காசிய நாடான ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வெகுண்டெழுந்த மக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, குழந்தைள் உட்பட 6,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 30,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில், 26 வயது இளைஞரான எர்பான் சுல்தானியும் ஒருவர். போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக, அவருக்கு துாக்கு தண்டனை விதிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

இதற்கு, ஈரான் அரசு மறுப்பு தெரிவித்து. அதே சமயம், அவரை விடுவிக்கும்படி உலகளவில் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஈரான் அரசு எர்பான் சுல்தானியை ஜாமினில் நேற்று விடுவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.