மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியன்மாரில் நேற்று (03) 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நில அதிர்வானது பூமியின் உட்புறத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக கொல்கத்தா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.