;
Athirady Tamil News

17 வயது யுவதிக்கு எமனான அயல்வீட்டு இளைஞன்; வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி

0

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு குறித்த யுவதி வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் யுவதியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பலத்த காயமடைந்த யுவதி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (04) உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பால பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.