;
Athirady Tamil News

76 வயதான மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

0

திரிவனகெட்டிய தோட்டத்திலுள்ள லயன் அறைக்குள் 76 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டியின் மரணம், அவரது மண்டை ஓடு மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் ஏற்பட்டதாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

வீட்டின் சமையலறையில் விழுந்து கிடந்த மூதாட்டி
உயிரிழந்தவர் மஹகம, திரிவனகெட்டிய பகுதியில் வசிக்கும் பெருமாள் லெட்சுமி என அகலவத்தை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

31ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் உடலொன்று கிடப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்தே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி வீட்டின் சமையலறையில் இரத்தப்போக்குடன் முகம் குப்புற விழுந்து கிடந்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையின் பின்புறத்திலும் முகத்திலும் பலமாக தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மககம, திரிவானகெட்டியவத்தை வீடொன்றில் வசித்து வந்த லெட்சுமி (76) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவுகளின்படி, இப்பெண்ணின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட தாக்குதலால் நிகழ்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.

மரணம் ஒரு படுகொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அகலவத்தை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.