‘டித்வா’ பாதிப்பில் தாய்,தந்தையை இழுந்து பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…
‘ ‘டித்வா’ சூறாவளியின் பாதிப்பால் பதுளையில் அதிகமான பிள்ளைகள் தாய்,தந்தையை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் தாய்,தந்தையை இழந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒரு துணைக்குழுவை நியமிக்க அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி போல்ராஜ் நேற்று (06.01.2026) நடவடிக்கை எடுத்துள்ளார்.
பதுளையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்
இந்த நிகழ்வு பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.பதுளையில் 28 பிள்ளைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு குடும்பங்களில் 5 குழந்தைகள் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் பிள்ளைகளுக்கான பராமரிப்புத் திட்டங்களைத் தயாரிக்க குறித்த துறையினர் செயலாற்றுமாறும் பிள்ளைகளின் உரிமைகளை மேலும் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர், அறிவுறுத்தினார்.
இந்த துணைக்குழுவை நிறுவுவதில் கள அதிகாரிகளின் முக்கிய பங்காகும். அபாயங்களை அடையாளம் காண்பதோடு, பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமை மீறல்கள், குற்றவியல் சம்பவங்கள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.