இச் சர்வதேச மாநாட்டில் உலக மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் சவால்களைப் பற்றி விவாதிக்கப்படுவதோடு புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும் பல்துறை ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் உள்ளுர் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான முக்கிய களமாக அமையவுள்ளது.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் இசைவாக்கம், உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நீதியும் நெறிமுறையும், நிலையான வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு, பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மாதிரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பண்பாட்டு பார்வைகள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பல்துறை அணுகுமுறைகள் ஆகியவற்றுடன், மொழியியல் மற்றும் தொடர்பியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் இலக்கியம் மற்றும் நெறிமுறை தொடர்பான ஆய்வுகள், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறைகளில் புதுமைகள், இயற்பியல், இரசாயன மற்றும் கணித அறிவியல்களில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆய்வுகள், கணித மாதிரிகள், சுகாதாரம், ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு, உயிரியல் வளங்களிலிருந்து மருந்தியல் மற்றும் ஊட்டச்சத்து தயாரிப்புகள், நிலையான நீர்வாழ் உயிரியல் வளர்ப்பு, சமூக அறிவியல் மற்றும் பண்பாட்டு பார்வையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகவியல், பொருளாதாரம், கல்வி மற்றும் கொள்கை ஆய்வுகள் போன்ற முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளதுடன் துறைசார் பேராசிரியர்களின் உரைகளும் இடம்பெற உள்ளன.
இந்நிகழ்வின் முதலாவது செயலமர்வு காலை 8 மணிக்கு மருத்துவ பீடத்தின் கூவர் அரங்கில் விழா நடைபெற்று பின்னர் இரண்டாம் அமர்வு விஞ்ஞான பீடத்திலும், அதனை தொடர்ந்து இறுதி அமர்வு நூலக கேட்போர் கூடத்திலும் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டுக்கான இணை அனுசரணையாளர்களாக இந்தியாவின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருப்பத்தூர் ; Sacred Heart College (Autonomous), Azentra Global ஆகிய நிறுவனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.