;
Athirady Tamil News

சஜித் தரப்பு அரசியல்வாதி மீது நள்ளிரவில் கொலை முயற்சி

0

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார்.

இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.