;
Athirady Tamil News

ஒபாமா, அவரது மனைவி தொடர்பில் வெளியான காணொளி ; மன்னிப்பு கேட்க மாட்டேன்

0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார்.

மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன்.

அதை நான் பகிர்ந்தேன். அது சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். ஆட்சேபனைக்குரிய பகுதி பற்றி எனக்கு தெரியாது.

நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.