;
Athirady Tamil News

ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல் ; அதிகரிக்கும் ஈரானுடனான பதற்றம்

0

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.

போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

அணுசக்தி ஒப்பந்தம்
மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில் ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அந்த போர்க்கப்பல் ஈரானை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளது. ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.

ஈரானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில் பாரசீக வளைகுடாவில் உள்ள யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் ஜெரால்ட் ஆர் போர்டு போர்க்கப்பல் இணைய உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.