;
Athirady Tamil News

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள விருது வழங்கல்

0
கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மாதம் 22 திகதியன்று யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வர்த்தகம், விவசாயம், கடற்றொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்துறை சார் வர்த்தக பொருளாதார துறையில் இருக்கும் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக விருது வழங்கப்படுகின்றது.

கடந்த வருடம் யாழ்ப்பாணம் மட்டக்கப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை கௌரவித்து, விருது வழங்கிய நிலையில், இம்முறை முல்லைத்தீவு , மன்னார், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கௌரவிக்க உள்ளோம்.

குறிப்பாக பெண்களின் திறமைகள் அவர்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வழி செய்கின்றோம்.

உற்பத்தியாகர்கள், சுற்றுலா துறைசார் முயற்சியாளர்ககும் இதில் முக்கிய இடம் பெறுவர்.

சிறிய நடுத்தர வர்த்தக மற்றும் முயற்சியாளர்கள் இதில் தமது கலந்துகொண்டு தமது முயற்சிகளை உலகுக்கு கொண்டுசெல்ல முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தமது முயற்சிகளை அடையாளப்படுத்தி விண்ணப்பங்களை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 31 திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவாகும் முயற்சியாளர்களுக்கு எதிர்வரும்  மே மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் விருதுகள் வழங்கி வைக்கப்படும்.

விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு 20 முயற்சியாகர்கள் விருதுகளை பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு அது 25 முதல் 30 வரையானோர் பெறும் வகையில் விருது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.