அக்குரேகொட இரட்டைக் கொலை ; தீக்கிரையாக்கப்பட்ட கார் ; களமிறங்கிய அரச இரசாயன பகுப்பாய்வாளர்
அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும், காலி – பத்தேகம, அகலிய பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட காரைப் பரிசோதிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று (17) முற்பகல் அங்கு விஜயம் செய்தனர்.
கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் வைத்து இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர்.
காரைக் கண்டுபிடித்த சந்தர்ப்பத்தில் அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அப்பிரிவினர் தெரிவித்தனர்.
சட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும் அவரது மனைவியின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கார், காலி – அகலிய பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்ற போதே, கார் தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளனர்.
