;
Athirady Tamil News

மீண்டும் நாட்டில் எரிவாயு வரிசை; வெட்கம் என்கிறார் பெரமுன முன்னாள் எம்பி!

0

மீண்டும் எரிவாயு வரிசை ஏற்பட்டுள்ளமையை இட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். “அந்தக் காலத்திலும் எரிவாயு (Gas) வரிசையில் நின்றோம், அப்போது ஒரு வாரம் வரை நின்றோம்.

ஒரு நிமிடம் கூட வரிசையில் நிற்க வைக்க மாட்டோம்
இன்று இரண்டு மூன்று மணிநேரம் தான் நிற்கிறோம். இரண்டு மூன்று மணிநேரம் நிற்பது கடினமா என்று கேட்காதீர்கள், அது அநீதியானது.

ஒரு மணிநேரம் அல்ல, ஒரு நிமிடம் கூட வரிசையில் நிற்க வைக்க மாட்டோம் என்று கூறியமையால் தான் 69 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்.

இதனையிட்டு வெட்கமடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.