;
Athirady Tamil News

அதிவேக ரயிலுடன் மோதிய கெப் வாகனம் ; மூவர் படுகாயம்

0

இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நபர்கள் காயம்
இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

ரயிலில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று நபர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.