திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!
திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை கைது தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் தமிழ்நாட்டின் திருப்பூரில் கைது செய்தனர்.