;
Athirady Tamil News

நோன்புக் கஞ்சிக்கு விசேட சுகாதார கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

0

புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தற்போது களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சுகாதார வைத்திய அதிகாரி வழிகாட்டுதலின் கீழ் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அடிப்படையில் நேரடிப் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றன.

இதன் போது கஞ்சி காய்ச்சப்படும் இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் பாத்திரங்களின் தூய்மை குறித்து தொடர்ச்சியான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வழிகாட்டுதல்கள் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கஞ்சி காய்ச்சுபவர்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் உணவுப் பாதுகாப்பு மூலப்பொருட்களின் தரம் முதல் விநியோகம் வரை அனைத்து நிலைகளிலும் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கான சுகாதாரமான முறையில் நோன்புக் கஞ்சினை பெற்றுக் கொள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.