ஈரான் ஏவுகணைத் திட்டம் ; அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் எச்சரிக்கை
ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு மறுப்பது பெரிய சிக்கலாக அமையும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்கி வரும் நிலையில், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளை டெஹ்ரான் (Tehran) உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரானின் ஏவுகணைத் திட்டம் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், ஈரான் இதனைப் பற்றி விவாதிக்க மறுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.