;
Athirady Tamil News

எரிபொருள் கையிருப்பு ; லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், 26 நாட்களுக்குத் தேவையான டீசலும் தற்போது கையிருப்பில் உள்ளதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக எரிபொருளை முண்டியடித்துக் கொள்வனவு செய்வதையோ அல்லது தேவையற்ற முறையில் வீடுகளில் பதுக்கி வைப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.