;
Athirady Tamil News

யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்!

0

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளானது, முழுமையாக எரிபொருளால் நிரப்பப்பட்ட பின் திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை வளைகுடா போரினால் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் எனும் அச்சத்தில் மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய முண்டியடித்து வருகின்றனர்.

சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.