அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்த ஈரான்
இஸ்ரேல்-ஈரான் போரின் தொடக்கத்திலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், RTX நிறுவனத்தின் AN/TPY-2 ரேடார் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல், ஈரானின் மிகச்சிறந்த தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த ரேடார் அமெரிக்காவின் THAAD (Terminal High Altitude Area Defence) அமைப்பின் முக்கிய அங்கமாகும். இது 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது.
THAAD அமைப்புகள் உலகில் 8 இடங்களில் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று ஜோர்டானில் இருந்தது.
ரேடார் அழிந்ததால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தற்போது Patriot PAC-3 ஏவுகணை அமைப்புகளை அதிகமாக நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், PAC-3 ஏவுகணைகள் ஏற்கெனவே குறைவாகவே உள்ளதால், பாதுகாப்பு திறனில் சவால்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
முன்னதாக கத்தாரில் இருந்த AN/FPS-132 ரேடார் அமைப்பும் ஈரான் தாக்குதலில் சேதமடைந்தது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது பாரிய இழப்பு என்றும், THAAD போன்ற அமைப்புகள் குறைவாகவே இருப்பதாகவும், புதிய உற்பத்தி அவசரமாக தேவைப்படுவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.