ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை இன்று நடைபெற்றது.
இதில்,இரத்த சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம்,உடற் திணிவு சுட்டெண் (BMI)ஆகிய முக்கியமான சுகாதாரக் குறியீடுகள் பரிசோதிக்கப்பட்டன.
மேலும், இப்பரிசோதனையின் மூலம் தொற்றாத நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எமது அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இணைந்து செயற்பட்டு, நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.
இத்தகைய சுகாதார நடவடிக்கைகள் சமூகத்தில் நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது உடல்நல நிலையை பரிசோதித்துக் கொண்டனர்.
