;
Athirady Tamil News

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!

0

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சையதின் நெருங்கிய நண்பர் ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் யூசுப் அப்ரிடி தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பது, குழுக்களை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளைச் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா பகுதியில் ஞாயிறன்று (ஏப்ரல் 26) ஆயுதமேந்திய மர்ம நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும், எந்த அமைப்பும் இதுவரை கொலைக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொலை தொடர்பாக அந்தப் பகுதியினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹஃபிஸ் சையது தொடங்கிய தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கைபர் பகுதியின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மத அறிஞராக அப்ரிடி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா சில நாள்களுக்கு முன்பு லாகூரில் வைத்து சுடப்பட்டதில் காயங்களுடன் தப்பித்தார். ஹஃபீஸ் சையதுக்கு அடுத்ததாக அந்த அமைப்பில் உள்ள முக்கியத் தலைவராக அறியப்படும் இவர் 2019 முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.