;
Athirady Tamil News

பொத்துவில் லக்சுமி முன்பள்ளியில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு

0
உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி, முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பொத்துவில் றஹ்மத்நகர் முன்பள்ளி மற்றும் குண்டுமடு லக்சுமி முன்பள்ளி ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாய்ச்சுகாதாரம் தொடர்பான ஆரோக்கியமான பற்கள் அழகான புன்னகை விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (28) லக்சுமி முன்பள்ளியில் இடம்பெற்றது.

வாயின் மகிழ்ச்சி… வாழ்வின் மகிழ்ச்சி… ஆரோக்கியமான பற்கள் அழகான புன்னகை எனும் தொனிப்பொருளில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ்  பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.ஹபீப் முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் பிராந்திய தாய்சேய் நலன் பிரிவு பொறுப்பு  ய அதிகாரி வைத்தியர் பீ.ஜி.டேனியல், நடமாடும் பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.எம்.பைறூஸ் மற்றும் பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ்.ரத்நாயக்க ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, சிறுவர்களின் பற்களைப் பாதுகாக்கவும் பற்சிதைவை தடுப்பதற்கான ‘புளோரைட் வார்னிஷ்’ சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும், சரியான பல் துலக்கும் முறைகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், மற்றும் வாய்வழி நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமூக ஆயுர்வேத வைத்திய அதிகாரி பஸ்மியா, மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.ஜனலோஜினி மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், பாடசாலை பல் சிகிச்சையாளர் வை.அர்ச்சனா உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1

You might also like

Leave A Reply

Your email address will not be published.