;
Athirady Tamil News

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழர்

0

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.

இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சார்ந்து இயங்கும் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.