;
Athirady Tamil News

ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதிய கனடா விமானம்; 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவர் பலி… 70 இற்கும் மேற்பட்டோர் காயம்
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். குறித்த விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகத் தெரிகிறது.

அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.