;
Athirady Tamil News

மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம்; பொலிசார் தீவிர விசாரணை

0

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.