;
Athirady Tamil News

யாழ்ப்பாண ‘நெடுந்தாரகை’ படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

0

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய தினம் ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் மூலம் குறித்த படகு இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.

மேலும், ‘நெடுந்தாரகை’ படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.