;
Athirady Tamil News

கோவிலுக்கு சென்று வரும் போது அடித்த அதிர்ஷ்டம் – லொட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி பரிசு

0

கோவிலில் சாமி தரிசனம் முடித்து செல்லும் வழியில் லொட்டரி வாங்கியவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கோயம்புத்தூரில் சாமி தரிசனம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் 51 வயதான நதுவெட்டில் பத்மநாபன்.

இவருக்கு ஸ்மிதா என்பவருடன் திருமணமாகி, 10வது படிக்கும் ஸ்ரீஹரி என்ற மகனும், 7வது படிக்கும் பர்வானா என்ற மகளும் உள்ளனர்.

இவர், கடந்த 8 ஆண்டுகளாக கோழிச்சேனாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருகிறார். பத்மநாபன், கோயம்புத்தூரில் உள்ள கோவில் ஒன்றுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.

லொட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத இவர், மார்ச் 26 ஆம் திகதி கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு சென்ற போது அங்கு ரூ.250 மதிப்புள்ள கேரள சம்மர் பம்பர் லொட்டரியை வாங்கியுள்ளார்.

லொட்டரியில் ரூ.10 கோடி பரிசு
அவர் வாங்கிய SB 517026 என்ற லொட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளதாக இன்று காலை, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கேட்ட அவரது குடும்பம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பரிசுத்தொகையை பெற, பத்மநாபன் வெற்றி பெற்ற டிக்கெட்டை பரப்பனங்காடியில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார்.

பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றியவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது அவரது வாழ்வில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.