;
Athirady Tamil News

யாழில். ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு – இளைஞன் கைது

0
யாழ்ப்பாணத்தில்  ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர்கள் புதிய இணைப்புக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.