வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் (ஐசிடி) தீா்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 3 முன்னாள் போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்பட 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இப்போராட்டங்களின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட காரணமாக இருந்ததாகக் கூறி, ஷேக் ஹசீனாவுக்கு இதே தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.