கொழும்பில் கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவி
கொழும்பில் பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல தொட்டுபால வீதியில் விபத்து பதிவாகி உள்ளது.
நேற்று பிற்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடந்து கொண்டிருந்த மாணவி ஒருவர், அதே பேருந்தால் மோதப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மாணவி பலி
விபத்தில் படுகாயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பாடசாலை மாணவி, மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி என தெரியவந்துள்ளது.
இவ்விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.