அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!
அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள 2நிலையில் அவருக்கு பாராடுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.
Windham-Campbell விருது மட்டுமல்லாது அத்துடன் 175000 டாலர் (5.5 கோடி ரூபா) பரிசாக கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு சக்தி அவர்களுக்கு குடியுரிமை வழங்கியதுடன் அவர் ஈழத்தின் வலிகளை நாடகமாக அரங்கேற்ற அனுமதி அளித்து பரிசு பெற வாய்ப்பும் வழங்கியுள்ளது.
எங்கள் கதைகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக உள்ளது
ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் குடியுரிமை வழங்குவதுடன் அவர்கள் சாதனை செய்யவும் அந் நாடுகள் வாய்ப்பு வழங்குகின்றன. எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளார்.
நாடகத் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக 1,75,000 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்வியலை மையமாக வைத்து இவர் எழுதிய Counting and Cracking என்ற நாடகம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தது. தனது வெற்றி குறித்துப் பேசிய சக்தி, “எங்கள் கதைகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் The Laugh of Lakshmi என்ற தனது முதல் திரைப்படத்தைப் படமாக்கி வருகின்றார். ஆஸ்திரேலிய நாடகத் துறையில் ஆசிய மக்களின் கதைகளை ஆழமாகப் பதிவு செய்யும் சக்தியின் எழுத்துக்கள், நவீன ஆஸ்திரேலியா குறித்த புதிய பார்வையை உலகிற்கு வழங்குகின்றன.
இவரது நாடகங்கள் ஏற்கனவே விக்டோரியன் இலக்கிய விருது உட்படப் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளன. சக்தியின் மற்றொரு படைப்பான The Jungle and the Sea, இலங்கை உள்நாட்டுப் போரின் வலிகளைப் பதிவு செய்தது.
இவரது அண்மைக்கால படைப்பான The Wrong Gods மற்றும் சுயசரிதை புத்தகமும் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விருது ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் ஆய்வு செய்து, ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது.
இந்த அங்கீகாரம் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும் என சக்திதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்துவரும் ஈழத்தமிழர்களுக்கு வெளிநாடுகள் குழ்டியிருமை வழங்கியுள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் ஈழத் தமிழரை 40 வருடமாக அகதியாகவே வைத்திருக்கிறது.
இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்
இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்
தேர்தல் வரும்போதெல்லாம் எல்லா கட்சிகளும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக் கொடும்போம் என வாக்குறுதி அளிப்பதும், தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதும், தேர்தல் முடிந்த பின்பு ஆட்சியில் இருக்கும்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மறந்துவிடுவதுமாகவே உள்ளது.