வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (23) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ,வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்பமான நிலை காணப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச் சுட்டெண்
மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண், நாளை 21 மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தவிர்ந்து கொள்ள பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இயன்றவரை நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.