;
Athirady Tamil News

இலங்கையில் மீண்டும் தட்டம்மை பரவல்; அதிகாரிகள் எச்சரிக்கை

0

இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய ரீதியில் மீண்டும் பரவக்கூடிய அபாயம் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

தட்டம்மை தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத அல்லது ஒரு கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கு, தாமதமின்றி முழுமையான தடுப்பூசி அட்டவணையை பூர்த்தி செய்யுமாறு பெற்றோர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.