;
Athirady Tamil News

தண்ணீர் பிரச்சினையில் இரு தரப்பினர் இடையே மோதல் – 42 பேர் பலி

0

நிஜாமேனா,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன, மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கால்நடைகளை மேய்ப்பதில் பிரச்சினை என மோதல் போக்கு நிலவி வருகிறது. நில உரிமையாளர்களுக்கும், கால்நடை உரிமையாளர்களுக்கும் பிரச்சினை நிலவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் வடிபிரா மாகாணம் ஐகொடி கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அண்டை கிராமங்களுக்கும் பரவியது. இரு தரப்பினரும் துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் கொண்டு மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். பலரின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. மோதலை குறைக்கும் வகையில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.