;
Athirady Tamil News

20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம்

0

2014 ஆம் ஆண்டு காலி – ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தீர்ப்பளித்தார்.

முதல் குற்றவாளியான மகனுக்கு, பிறிதொரு கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையும், இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றவாளியான தந்தைக்குப் பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் இரண்டு மாத சிறைத்தண்டனையும், இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

2014 ஆம் ஆண்டு மே 1 முதல் 31 ஆம் திகதிக்குள், ஹபரடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெதின்னொருவ கிராமத்தில், 20 வயது இளம்பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டி, கொலை மிரட்டல் விடுத்து, பின்னர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக, அப்போது 38 வயதான மகனும் 64 வயதான தந்தையும் காலி உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

முதல் குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் மூன்றாவது சகோதரியின் கணவர் ஆவார், இரண்டாவது குற்றவாளி அவரது தந்தை ஆவார். அவர்கள் அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் வசித்து வருகின்றனர்.

தாயார் அதிர்ச்சி
அன்று, முதல் குற்றவாளி, தனது மனைவியின் சகோதரியான பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கொடுத்து, பொருட்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து, தங்கள் வீட்டில் உள்ள மேஜையின் மீது வைத்துள்ளார். இதன்போது முதல் குற்றவாளி வந்து அவரது வாயை பொத்தி, படுக்கை அறைக்கு அவரை இழுத்துச் சென்று, கைகளைக் கட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார்.

பின்னர், இரண்டாவது குற்றவாளியான தந்தையும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, அவர் இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை.

சம்பவத்தின் பின்னர் யுவதிக்கு இரண்டு மாதங்களாக மாதவிடாய் ஏற்படாததால், தாயார் பத்தேகம பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டபோதே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிசியின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அது ஹபரடுவ பொலிசிற்க்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.