;
Athirady Tamil News

ஸ்பெயின்: கண்காட்சியில் ஸ்லிங்ஷாட் ரைடு ரோப் அறுந்து விபத்து

0

மாட்ரிட்,

ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா பகுதியில் உள்ள செவில் நகரில் ஒரு வார காலம் கண்காட்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் திரில்லிங்கான சவாரியான ‘ஸ்லிங்ஷாட் ரைடு’ இடம்பெற்றிருந்தது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்லிங் ஷாட் ரைடில் இரண்டு சிறுவர்கள் அமர்ந்து சவாரி செய்தனர். வழக்கம் போல் ஸ்லிங் ஷாட் ரைடு நன்றாகத்தான் சென்றது.

மேலே சென்று சுழன்றுகொண்டிருந்தபோது இடதுபுறம் இருந்த ரோப் திடீரென அறுந்ததால், சிறுவர்கள் அமர்ந்து சவாரி செய்த பெட்டி, சுமார் தொண்ணூறு மீட்டர் உயரத்திலிருந்து, வேகமாக வந்து தரையை நோக்கி பாய்ந்தது.

கீழே வரும்போது பக்கவாட்டில் உள்ள கம்பம் மீது தாறுமாறாக மோதியது. இதில் பெட்டியில் இருந்த 2 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். ஸ்லிங்ஷாட் பெட்டி விழுந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நிகழும்போது அங்கிருந்த மக்கள் இந்த விபத்தை பார்த்து பதறி துடித்தனர். காயமடைந்த நான்கு பேரும், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.