நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை ; அவதானம் மக்களே
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று (28) நண்பகல் 12:00 மணிக்கு விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை, இரவு 11:30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பிற்பகல் 1:00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.