;
Athirady Tamil News

யாழில் முறியடிக்கப்பட்ட நீண்டகால கசிப்பு கடத்தல்: இருவர் பொலிஸ் வலையில்!

0

யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து இருபது போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் அப்பகுதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.