;
Athirady Tamil News

பௌத்த நாடாக இல்லாவிட்டால்  முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால்

0
video link-

நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தவிசாளர் மெளலவி மிப்லால் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அறுகம்பை பகுதியில்  வைத்து   கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்   இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

அறுகம்பை பகுதியில் வருகை தரும் இஸ்ரேலியர்களின் விழுகின்ற மயிர்களை கூட மிதிப்பவர்கள் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது வந்து விட்டது.தயவுசெய்து இவ்வாறான நிலைமைகளை பாதுகாப்பு தரப்பினர் மாற்றி அமைக்க வேண்டும்.எனது அன்பான வேண்டுகோள் என்னவெனின் எதிர்வரும் 6 ஆந் திகதி கிழக்கு மாகாண சட்டத்தரணிகள் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வாருங்கள்.அதுமாத்திரமன்றி கிழக்கு மாகாண தனவந்தர்கள் புத்திஜீவிகள் முன்வாருங்கள்.பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறையாவது பாராளுமன்ற அமர்வுகளில் இந்த விடயத்தை பேச முன்வாருங்கள்.இவ்வாறான விடயங்களை தொடர விடக்கூடாது. இவ்வாறான நிலைமைகள் தொடருமானால் இந்த நாட்டில் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாத காலகட்டமும் வரலாம்.

இந்த விடையத்தை எவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.ஏனெனில் இங்கு உள்ளவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் நடைபெற்ற விடயங்களை மறக்க கூடியவர்கள்.30 வருட காலம் நாங்கள் எதிர்கொண்ட துன்பங்கள் போதும்.அந்த யுத்தத்தை எவ்வாறு நிறைவுக்கு கொண்டு வந்தோம் என்பதையும் எவரும் மறக்க வில்லை.இவ்வாறு மீட்ட நாட்டை மற்றுமொரு தரப்பினருக்கு பறி கொடுக்க எவரும் இடமளிக்க கூடாது.இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லீம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கின்றோம்.ஆனால் இந்த நாடு வேறோரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம் என குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.