;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு

0

ஜம்மு-காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் 3 பேரின் உடல்களும் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரின் பந்தாலா பகுதியில் மிகவும் பழைமையான பாலம் உள்ளது. அந்தப் பாலம் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில் சேதமடைந்திருந்தது. இதையடுத்து, பாலத்தின் சுவா், அடித்தளத்தை பலப்படுத்தி சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது பாலத்தின் குறிப்பிட்ட அடிப்பகுதி உள்வாங்கியது. இதில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா், ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். முதலில் ஒரு தொழிலாளியை லேசான காயத்துடன் அவா்கள் மீட்டனா். மேலும் சிலா் உள்ளேயே சிக்கியிருந்ததால் அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை 12 மணி நேரம் மீட்புப் பணி நடைபெற்றது. முடிவில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனா். மீட்புப் பணியில் தீயணைப்புப் படை அதிகாரி உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் உடனடியாகச் சோ்க்கப்பட்டனா்.

துணை முதல்வா் செளதரி சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு நேரில் வந்து ஆய்வு செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இந்த சம்பவம் தொடா்பாக 2 பொறியாளா்களைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

பாலம் இடிந்து உயிரிழந்தவா்களுக்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டாா். அவரது உத்தரவைத் தொடா்ந்து, பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க 5 போ் கொண்ட குழுவை ஜம்மு-காஷ்மீா் அரசு அமைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.