;
Athirady Tamil News

நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்த நபர்

0

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரோட்லென் நீர்த்தேக்கத்தில் குதித்து நபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்லேவத்த – பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய அனுர பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நீண்டகாலமாக மனநலப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் வட்டவளை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.